எப்படி இருக்கணும் ?எளிமையாக சுவாரசியமாக தகவல் பிழைகள் இல்லாமல் போதனை தொனி இல்லாமல் நிறைய படங்களுடன் குறைவான சொற்களுடன்
4.
எளிமை என்றால் என்ன? புழக்கத்தில் உள்ள சொற்கள் நான்கு அல்லது ஐந்து சொற்களுக்கு மிகாத வாக்கிய அமைப்பு சிறு பத்திகள் நேரடியாகப் பேசும் தொனி
5.
புழக்கத்தில் உள்ள சொற்கள்வசுதேவா நீங்கள் என் பிராண சிநேகிதராயிருக்கலாம் . தேவகி என் தமக்கையாகவே இருந்தாலும்கூட என் உயிரைக் கொய்யவல்ல குழந்தை அவளது வயிற்றில் ஜனிப்பானேயானால் நானே அதன் சத்ருவாவேன் . தேவர்களும் கந்தர்வர்களும் கிங்கர சூரர்களும் மானுட , ராட்சஸ வம்சத்தவர்களும் நான்முகனும் பிறைசூடிய பெருமானும் விஷ்ணுவும் கூடிவந்து எதிர்த்தாலும் சரி . என் கையாலேயே அவனுக்கு மரணம் சம்பவிக்கும் .
சிறு வாக்கிய அமைப்புசில நேரங்களில் எதிரி ஏவுகணைகளை , வழியிலேயே மறித்து அழிக்கும் ஏவுகணைகளைப் போலவே தூது செல்லும் புறாவை வழிமடக்கி , வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் புறாக்களையும் சிலர் வளர்த்தனர் . [ பறவைகள் 56 ம் பக்கம் ]
8.
சிறு வாக்கிய அமைப்புஇப்படி மாற்றலாமா ? யுத்தங்களில் ஏவுகணைகளுக்கு எதிர்க்கணைகள் உண்டு . அதுபோல , தூது செல்லும் புறாவை மடக்கி திசைமாற்றவும் புறாக்களையே பயன்படுத்தினார்கள் .
9.
சிறு பத்திகள் என்றால்உடனுக்குடன் காட்சிமாற்றம் என்று பொருள் என்றால் வேகம் என்று பொருள் என்றால் போரடிக்காது என்று பொருள்
10.
நேரடியாகப் பேசும் தொனிசிறுநீரகத்தின் 32 ம் பக்கத்துக்குப் போ . கன்ஃபூஷியஸின் 32 ம் பக்கத்துக்குப் போ
விறுவிறுப்பு அன்று மாலைஅவர்கள் தலை துண்டிக்கப்பட்டது . கூரான குச்சிகளில் அவர்கள் தலைகளைச் சொருகி , பொதுமக்கள் உலாவும் இடத்தில் காட்சிப்படுத்தினார்கள் . இனி ஒரு பயலும் அரசாங்கத்தை எதிர்த்து மூச்சுவிடக்கூடாது அல்லவா ? [ மாவோ பக் 16]
13.
நாடகத்தன்மை ‘ கிருஷ்ணா! விஜயநகரைக் காப்பதற்காகவும் அதை விஸ்தரிப்பதற்காகவும் நீ பல போர்களை நடத்திக்கொண்டிருக்கிறாய் . உன் அன்னைக்காகவும் ஒரு போரை நீ நடத்த வேண்டியிருக்கும் , கலிங்கம் !’ என்றார் கிருஷ்ண தேவராயரின் தாய் நாகலாம்பிகை . திகைத்துப்போனார் கிருஷ்ண தேவராயர் . [ கிருஷ்ண தேவராயர் பக் .44]
தகவல் பிழையின்றி எழுதுவதுஎப்படி ? எழுதவிருக்கும் பொருள் பற்றி ஆழமாகப் படித்தல் . படிக்கும்போதே தேதி , வருட விவரங்களைத் தனியே குறித்து வைத்தல் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும்போது அடைப்புக்குள் ஸ்பெல்லிங் . அவசியமானால் தமிழ் . நம்மைக் குழப்பும் விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளாமல் எழுதக்கூடாது . தெரியாத இடங்களைத் தாண்டிப் போகாதே . எழுதி முடித்து , சரிபார் .
20.
சொற்களும் படங்களும் ட்விட்டர்பயிலுங்கள் . எத்தனை எழுதினாலும் மூன்றில் ஒரு பங்காக்குங்கள் எழுதுகிற அனைத்தையும் படமாக்க முயற்சி செய்யவும் [ காட்சிப்படுத்துதல் ] முகங்கள் , இடங்கள் , கண்டுபிடிப்புகளுக்கு போட்டோ அவசியம் படங்களும் படக்குறிப்புகளும்
21.
போதனை வேண்டாம் !போதனை யாருக்கும் பிடிக்காது போதிப்பதால் பயனில்லை போதிப்பதே போரடிக்கும் அறிவை விதைப்போம் , அறுவையை அல்ல . அவசியமென்றால் கதையாகச் சொல்லவும் . ஆனால் , இதனால் அறியப்படுவது எதுவெனச் சொல்லவேண்டாம் .
ஒரு புத்தகம் வாசித்துமுடித்ததும் துள்ளிக் குதிக்கவேண்டும் குறிப்பிட்ட விஷயம் பற்றி மேற்கொண்டு அறிய ஆவல் கொள்ளவேண்டும் . நண்பர்களிடம் பேசவேண்டும் . வாசித்த பாதிப்பு நடவடிக்கையில் தெரியவேண்டும் .
24.
எனவே .... புத்தகத்தைத்தயாரித்து முடித்ததும் வாசித்துப்பார்க்கவும் . இந்த நான்கில் ஏதாவது ஒன்று நமக்குச் சாத்தியமில்லை என்றாலும் பிரதியைக் கிழித்துப் போட்டுவிடவும் . முற்றும்
25.
Prodigy பயிலரங்குக்காக ... பா . ராகவன் Chief Editor – New Horizon Media Private Ltd, Chennai 600 018