Download free for 30 days
Sign in
Upload
Language (EN)
Support
Business
Mobile
Social Media
Marketing
Technology
Art & Photos
Career
Design
Education
Presentations & Public Speaking
Government & Nonprofit
Healthcare
Internet
Law
Leadership & Management
Automotive
Engineering
Software
Recruiting & HR
Retail
Sales
Services
Science
Small Business & Entrepreneurship
Food
Environment
Economy & Finance
Data & Analytics
Investor Relations
Sports
Spiritual
News & Politics
Travel
Self Improvement
Real Estate
Entertainment & Humor
Health & Medicine
Devices & Hardware
Lifestyle
Change Language
Language
English
Español
Português
Français
Deutsche
Cancel
Save
Submit search
EN
Uploaded by
Gayathri309250
4,117 views
Sri Lalitha Sahasranamam.pdf
sri
Spiritual
◦
Read more
1
Save
Share
Embed
Embed presentation
Download
Download to read offline
1
/ 8
2
/ 8
3
/ 8
4
/ 8
Most read
5
/ 8
6
/ 8
Most read
7
/ 8
Most read
8
/ 8
More Related Content
PPTX
Nabh nursing excellence certification programme
by
MANISH PATGIRI
PDF
Management of Medication "MOM" NABH-6-STD-Jan-2025.pdf
by
Dr Jitu Lal Meena
PDF
list of narcotic psychotropic drugs and format of their record (1).pdf
by
Aslam Ansari
PPTX
Narcotic dispensing and storage.pptx
by
Dr.Irfan shaikh
PPTX
Total Quality Management , Industrial Pharmacy- II , B. Pharmacy VII semester
by
Vedant Bhor
PPTX
Medication Reconciliation
by
PAFP
PPTX
ISO 9000 & ISO 14000: pptx..............
by
GayatriBahatkar1
PPTX
ISO 9001 2015 | Management Reviews | The Five Rules To Business Excellence
by
Andre Barnarde
Nabh nursing excellence certification programme
by
MANISH PATGIRI
Management of Medication "MOM" NABH-6-STD-Jan-2025.pdf
by
Dr Jitu Lal Meena
list of narcotic psychotropic drugs and format of their record (1).pdf
by
Aslam Ansari
Narcotic dispensing and storage.pptx
by
Dr.Irfan shaikh
Total Quality Management , Industrial Pharmacy- II , B. Pharmacy VII semester
by
Vedant Bhor
Medication Reconciliation
by
PAFP
ISO 9000 & ISO 14000: pptx..............
by
GayatriBahatkar1
ISO 9001 2015 | Management Reviews | The Five Rules To Business Excellence
by
Andre Barnarde
Similar to Sri Lalitha Sahasranamam.pdf
PDF
Jai Shri Anjaneya Shlokams - Daily recital - 7.41pm.pdf
by
SrinivasadasanMadhav
DOCX
Shri Manthra raja padha stothram of Lakshmi Narasimha Swami.docx
by
SrinivasadasanMadhav
DOCX
GANAPATHI SLOKAS - Collection of frequently recited shlokas on Ganapathi.docx
by
SrinivasadasanMadhav
PDF
Varalakshmi song
by
Girija Muscut
PDF
499_LalithA_Sahasra_NAma-Sthothra-MalA.pdf
by
sridharan296342
PDF
Lalitha mangalam-ஸ்ரீலலிதாம்பாள் மங்களம்
by
Girija Muscut
PDF
Hanuman chalisa in tamil
by
Girija Muscut
DOCX
சத்யநாராயண அஷ்டோத்திரம்
by
Sangeetha Mam
PDF
Lingashtakam with tamil meaning
by
Girija Muscut
Jai Shri Anjaneya Shlokams - Daily recital - 7.41pm.pdf
by
SrinivasadasanMadhav
Shri Manthra raja padha stothram of Lakshmi Narasimha Swami.docx
by
SrinivasadasanMadhav
GANAPATHI SLOKAS - Collection of frequently recited shlokas on Ganapathi.docx
by
SrinivasadasanMadhav
Varalakshmi song
by
Girija Muscut
499_LalithA_Sahasra_NAma-Sthothra-MalA.pdf
by
sridharan296342
Lalitha mangalam-ஸ்ரீலலிதாம்பாள் மங்களம்
by
Girija Muscut
Hanuman chalisa in tamil
by
Girija Muscut
சத்யநாராயண அஷ்டோத்திரம்
by
Sangeetha Mam
Lingashtakam with tamil meaning
by
Girija Muscut
Sri Lalitha Sahasranamam.pdf
1.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் =================== ஸிந்தூர
மேனியளே முக்கன்னியே சந்திரன் ஒளிவீசும் மாணிக்கக் கிரீடமும் அணிந்தவளே எழில் நகை முகத்தவளே அழகிய மார்பினளே ரத்தினக் கலசமும் செங்குவளை மலர் கரங்களும் அழகிய திருவடி தாமரை அம்பிகையை தியானிக்கிறேன் அன்னையே பொன்னிற மேனியில் கடலெனக் கருணை மழை கண்களில் பாசம் அங்குசம் புஷ்ப பாணம் கரும்புவில் கரங்களில் அணிமாதி சக்திகள் ஆள்பவளை பரதேவதையை பவானியை அஹு எனும் தத்துவமாய் பாவிக்கிறேன் தாமரையில் அமர்ந்தவளை மலர்ந்த திருமுகத்தாளை குமுதக் கண்ணாளை பொன்னொளியாளை பட்டாடை தரித்தவளை பொற்றாமரையைக் கையில் பெற்றாளை ஸர்வாலங்கார பூஷணியை ஆதரிப்பவளை பக்தரைக் காப்பவளை பவானியை ஸ்ரீ வித்யா ரூபிணியை சாந்த மூர்த்தியை தேவர்கள் துதிப்பவளை ஸகல சம்பத்தும் அருள்பவளை எப்போதும் தியானிக்கிறேன் குங்கும நிறத்தாளை வண்டுகள் வட்டமிடும் கஸ்தூரி அணிந்தவளை புன்னகை வதனமும் அம்பு வில் பாசாங்குசம் கரத்தில் உடையவளை பக்தரை வசீகரிப்பவளை செந்நிற ஆபரணமும் மேனியும் கொண்டாளை செம்பருத்தி நிறத்தாளை பூஜை வேளையில் எப்போதும் சிந்திக்கிறேன் புவனியே லலிதாம்பிகையே அன்னையே சரணம் ஓம் அன்னையே உலகைக் காப்பவளே சிம்ம வாஹினியே அறிவெனும் அக்னியில் உதித்தவளே தேவரின் துணையே உதய சூரிய ஒளியே நான்கு திருக்கரம் உடையவளே பாசம் அங்குசம் ஏந்தி ஆசை அதர்மம் அழிப்பவளே மனமெனும் கரும்பு வில்லும், சப்த ஸ்பர்ச ரூப ரச கந்த பானமும் ஏந்தி ரட்சிக்கும் செந்நிறத்தவளே எல்லாமும் ஆனவளே சம்பக அஸோக புன்னாக செளகந்திக பூக்களை அணிந்தவளே பத்ம ராகம் பிரகாசிக்கும் கிரீடம் அணிந்தவளே பிறை ஒளி ப்ரகாசிக்கும் நெற்றியை உடையவளே சந்திரனின் களங்கமென நெற்றியில் கஸ்தூரி திலகமே மங்கள முகத்தின் தோரணம் உன் புருவமே முகமெனும் அழகு வெள்ளத்தில் மீன் எனக் கண்கள் துள்ளுமே மூக்கிலே செண்பக மலர் நளினமாய் மலருமே மூக்குத்தியில் வைரங்கள் நட்சத்திரத்தை பழிக்குமே செவியிலே கதம்ப மலர் பூத்து புன்னகைக்குமே சந்திரன் சூரியன் தோடுகளாய் ஆடிடுமே கன்னத்தின் ஒளி பத்ம ராகக் கண்ணாடியை விஞ்சிடுமே பவளமும் கோவைப் பழமும் இதழ்களை கண்டு வெட்கிடுமே சுத்த அறிவே பல் வரிசையாய் பளபளக்குமே எத்திசையும் மணக்கும் கற்பூர வீடிகை தாம்பூலமே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் வீணையில் நாதமே உன் மொழியிலே கொஞ்சுமே காமேஸ்ரன் மனப் பிரவாகத்தில் விளையாடும் புன்சிரிப்பே வர்ணனைக் கெட்டாத அழகான முகவாயே காமேஸ்வரனின் மங்கள மாங்கல்யம் பொன் கழுத்திலே
2.
மின்னிடும் பொன்னிலே தோள்வளை
தொங்கவே அசையும் முத்து ரத்தினம் வேண்டுவதைத் தரும் சக்தியிடமே காமேஸ்வரன் அன்பே ரத்தினக் கலசம் உன் மார்பே நாபியிலே முளைத்த உரோமக் கொடி தாங்கிடும் ஸ்தனமே கொடியைத் தாங்கிடும் மெல்லிடையாளே ஸ்தான பாரம் தாங்கிடும் மணி வயிற்றில் மூன்று பட்டையும் இடையிலே பட்டாடை செந்நிற ஒளி காட்ட அழகிய அரை ஞாணில் ரத்ன சதங்கை கலகலப்ப காமேஸன் அறியும் அழகிய தொடையின் மென்மையே முழங்காலில் சில்லுகள் மாணிக்க மகுடமே இந்த்ர கோபம் மொய்க்கும் மன்மத அம்பாரமோ உன் கழல்கள் ஆமையின் முதுகென வளைந்தது பொற்பாதம் அகத்திருளைப் போக்கும் நகக்கண்கள் உடையவளே தாமரையைப் பழிக்கும் அழகான திருப்பாதமே அழகுக் களஞ்சியமே இரத்தின சிலபொலிக்கும் பொற்கழல்களே அன்ன நடையாளே அழகுக்கு அணி செய்யும் அழகே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் பாதாதி கேசம் அழகின் ஆட்சியே சிவந்தவளே சிவசக்தி வடிவே காமேஸ்வரன் மடியில் அமர்ந்தவளே ஸ்ரீ நகர நாயகியே மேருவின் சிகர வாஸியே சிந்தாமணி உறைவிடமே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர ஈசான ஸதாசிவாசனமே தாமரைக் காட்டிலே கதம்பவன வாஸினியே அம்ருதக் கடலின் நடுவிலே அருட் பார்வையால் பாலிப்பவளே தேவரும் முனிவரும் போற்றும் ஆத்ம வைபவி பண்டாசுரனை வதைக்கும் சேனையின் சக்தி சம்பத்கரீ சக்தியின் கஜப்படை சூழ்பவளே பாசத்திலே உதயமான புரவிப்படை கொண்டவளே ஸர்வாயுதங்கள் சூழும் ஒன்பது படி ஸ்ரீ சக்ரத் தேரிலே ஏழுநிலை கேயச் சக்ர மந்த்ரிணீ தொழும் தேவியே கிரி சக்ரத் தேரிலே வராஹி வந்து வழி காட்டவே ஜ்வாலா மாலினியின் ஜொலிக்கும் கோட்டையில் இருப்பவளே பண்டாசுரப் போரில் படை வீரத்தில் மகிழ்பவளே நித்ய தேவதைகளின் வீரத்தில் ஆர்வம் உள்ளவளே பாலாதேவி பார்வையில் பண்டாஸுர மைந்தர் புறங்காட்டவே விஷங்களை விசுக்ரனை மாந்த்ரீணீ தண்டினீ தண்டிக்கவே விசுக்கரனைக் கொன்ற வாராஹியைப் புகழ்பவளே காமேஸ்வரன் கடைக்கண் நோக்க கணேசன் அவதாரக் காரணியே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் விசுக்ரனின் விக்னத்தை விரட்டிய கணேசனைக் கொஞ்சிடும் அன்னையே பண்டாசுரனின் படை நடுங்க அம்பு மழை பொழிந்தவளே நகங்களால் நாராயணனின் தசாவதாரம் தோற்றுவித்தவளே படைகளை பாசுபதாஸ்திரத்தால் பஸ்பம் செய்தவளே காமேஸ்வராஸ்திரத்தால் பண்டாசுர சூன்யத்தை எரித்தவளே தேவ கார்ய பூர்த்தியால் மூவரால் தேவரால் துதிக்கப்பட்டவளே மன்மதனை உயிர்ப்பித்த சஞ்சீவினி நீயே பஞ்சத சாக்ஷரீ மந்திரத்தின் வாக்பவ கூடமே தாமரை முகமே அழகிய கழுத்தின் கீழ் மலரும் மத்ய கூட வடிவமே இடையின் கீழ் சக்தி கூட சாந்நித்ய பாகமே மூலமந்த்ர கூடத்தின் பொருளே மூல வேத மந்த்ர உட்பொருளே அமிர்தம் எனும் குலாம்ருதம் பருகி யோக ரஹஸ்யங்களை காப்பவளே பதிவ்ரதயே சிவசக்தி வடிவமெனும் கெளலினீ குல யோகினியே ஆறு ஆதாரத்திற்கு உள்ளும் வெளியும் உறையும் தேவியே மூலாதாரக் குண்டலினீயே ப்ரம்ம முடிச்சுதனை பிளப்பவளே விஷ்ணு முடிச்சுதனை பிளந்து மணிபூரகத்தில் காட்சி தரும் அம்பிகையே புருவ மத்தியில் சக்தியே ருத்ர கிரந்தியைப் பிளப்பவளே ஸஹஸ்ரா ரத்தில் ஏறி அம்ருதத்தை பெருகச் செய்பவளே ஆறு ஆதாரத்திற்கும் அப்பாற்பட்டவளே மின்னல் கொடியே
3.
பக்தப்ரியே குண்டலினியே தாமரைத்
தண்டினும் மெல்லியளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் பிறவித்தனை அறுக்கும் பவானியே பாவனையால் அடையத் தகுந்தவளே பக்தருக்கு மங்களம் செளபாக்யம் தரும் அன்னையே பக்திக்கு வசமாகும் பக்தப்ரியே அச்சம் தவிப்பவளே சாரதா நவராத்ரி தேவி சம்பு நாயகி சுகம் தரும் சிவ பத்னியே சங்கரி ஸ்ரீகரி சாந்த சொரூபிணி முழு நிலவொளியே ஆதாரமிலா ஆதாரமே குற்றமற்ற கோமகளே தூயவளே பற்றிலா நிலைப்பொருளே கலக்கத்திற்கு எட்டாதவளே பிரிக்க வொணா முக்குணத்திற்கப்பாற்பட்டவளே அழிவற்ற சாந்த மூர்த்தியே பஞ்ச பூத்திற்கப்பாற்பட்ட முக்தி ரூபிணியே ஆதாரமற்றவளே குற்றமிலா வெள்ளை உள்ளமே ஒன்றானவளே விழிப்புடன் இருப்பவளே காரணத்தின் காரணியே குற்றமிலா அறிவே தனித்தவளே தானே ஆள்பவளே பற்றற்றவளே ஆசையை அழித்து மனோதிடம் தருபவளே ஆணவம் அழிப்பவளே அகங்காரமிலா ஆதியே கவலையற்றவளே மதிமயக்கம் இல்லாதவளே அஞ்ஞானம் தன்னலம் அகற்றும் பாபமற்றவளே பாவத்தின் அந்தமே கோபமற்றவளே ஐயம் பேராசை இல்லாதவளே அகற்றுபவளே பக்தரின் ஐயம் போக்கும் பிறவிப் பிணி அகற்றும் ஆதி அந்தம் இல்லாதவளே விருப்பமற்ற வேற்றுமை இலாத திடஸ்வரூபிணியே பேதங்கள் போக்கும் கால பயம் நீக்கும் அழிவற்றவளே செயலுக்கு அப்பாற்பட்டவளே இணை இலாதவளே கருங்கூந்தலுடையவளே ஆபத்தில் அணைப்பவளே அரிதானவளே நியதிகளைக் காப்பவளே துக்கத்தை துடைத்து மோட்சம் தருபவளே தீமைக்குத் தீயானவளே, சாஸ்திரங்களைக் காப்பவளே குற்றமற்றவளே அனைத்தும் அறிந்த கருணைக் கடலே நிகரற்றவளே சக்திரூபிணி மங்கள நாயகி ஸர்வேஸ்வரி நற்கதி தரும் நாயகி ஸகல மந்திரமாகி ஸகல வடிவாமாகி நிறைந்தவளே ஸர்வ யந்த்ர தந்த்ர ரூபிணி சக்ர நாயகி மஹேஸ்வரப்ரியா மஹேஸ்வரி மகாலட்சுமி ரூபிணி மூவரும் போற்றிடும் பேருருவே பிரியவளே பாதகநாசினி சக்தி ரூபிணி ஆனந்த மளிக்கும் அற்புத சக்தி சாலினி போகம் செல்வம் வல்லமை கீர்த்தி நிறைந்தவளே அஷ்டமாசித்தி தாயினி பேரறிவுச் செல்வி மூவருக்கும் ஈஸ்வரி தந்த்ர மந்த்ர யந்த்ர வித்தையின் முதல்வியே வேள்விகள் வணங்கும் மஹாபைரவர் பூஜிக்கும் ஆதிசக்தியே மஹாதேவனின் பிரளய மஹாதாண்டவ சாட்சியே மஹா காமேஸ்வரா ராணி ஸ்ரீ சக்ர மஹா திரிபுர சுந்தரியே அறுபத்து நான்கு உபசாரங்கள் கொண்டாடும் அறுபத்து நான்கு கலை வடிவே அறுபத்து நான்கு கோடி மோகினி கணங்கள் வணங்கும் ஒளியே மனு சந்திரன் வணங்கும் சந்த்ர மண்டல மத்ய வாஸினியே அழகின் ரூபமே அழகு உன் புன்சிரிப்பே அழகு சந்த்ர கலை தரித்தவளே அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகி ஸ்ரீ சக்ர வாஸினி தாமரைக் கண்ணியே பர்வத ராஜகுமாரி உன் பத்மராக ஒளி கண்களிலே அன்னையே உமையே லலிதாம்பிகையே சரணம் பஞ்சப் பிரம்மம் உன் ஆஸனம் பஞ்சபிரம்ம ரூபிணியே விஞ்ஞான சக்தியே சைதன்ய ரூபிணி பேரின்ப வடிவே தியானமே தியானிப்பவளே தியானவடிவே தர்ம அதர்மம் கடந்தவளே விழிப்பு நீ கனவு நீ சூட்சுமவடிவு நீ அகிலாண்டமும் நீ கனவற்ற நிலையே காரண சரீரமே துர்ய நிலையே அதற்கப்பாலும் நீயே படைப்பவளே காப்பவளே பிரம்ம வடிவே கோவிந்த ரூபிணியே ப்ரளயத்தில் உலகை அடக்கி மறைப்பவளே ருத்ர ரூபிணியே சதாசிவ ரூபிணி ஸ்ருஷ்டி ஸ்திதி லய திரோதாள அருக்ரஹ நாயகி பைரவி சூர்ய மண்டல வாஸினி நட்சத்திர மாலை சூடும் நாரணி தாமரை வாஸினி செல்வ நாயகி பத்மநாப சகோதரி கண் இமை திறந்து காப்பவளே கண் இமை மூடி அழிப்பவளே ஆயிரம் கண்கள் சிரசுகள் முகங்கள் பாதங்கள் கொண்ட ஆதி நாயகி ஓரறிவு உயிர் முதலாய் எல்லா உயிர்களையும் கருவில் காக்கும் தாயே
4.
வர்ண தர்மங்கள் காத்து
வேத வழி காட்டி பலனளிப்பவளே பாத தூளியே செந்தூரம் மங்கையர் நெற்றிக் குங்குமம் வேதமெனும் சிப்பியில் விளைந்திட்ட நல்முத்தே அறம் பொருள் இன்பம் வீடு தந்து ப்ரம்மானந்தம் காட்டி ஈரேழு லோகமும் மூவரும் துதிக்கும் முச்சக்தி பிறப்பிடமே நாராயணி நாத வடிவே அருவமே முத்தொழில் நாயகி எங்கும் நிறைந்த அகங்காரமிலா தவளே விருப்பு வெறுப்பற்றவளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் ராஜாதிராஜர் பூஜிக்கும் ராணி தாமரைக் கண் அழகியே பக்தருடன் விளையாடி ஆத்மரசம் தருபவளே கலகலக்கும் ஒட்டியாணம் அணிபவளே நிலவுத் திருமுக திருமகளே ரதியே ரதிக்குப் ப்ரியமானவளே அரக்கரை அழிப்பவளே கணவனைப் பிரியா காரிகையே வேண்டும் வரம் தரும் காமக்கலை வடிவே கதம்ப மலரில் ப்ரியமுள்ளவளே மங்களம் விரும்பும் மங்கள வடிவே உலகின் வேரே கருணைக் கடலே 64 கலை வடிவமே பேச்சில் வல்லவளே எழில் நிறைவே காதம்பரி ப்ரியே வரம் தரும் விழியாளே வாருணி நாடியின் ஆனந்தத் தேன் ஆனந்தமே வேதங்கள் அறியும் தத்துவத் தலைவியே விந்த்யமலை வாஸியே உலகை தாங்கும் வேதத் தாயே விஷ்ணுமாயே அடியவர் ஆனந்தம் உன் இலக்கே க்ஷேத்ர வடிவே க்ஷேத்ர தலைவியே உடல் உயிர் பாலிப்பவளே உயிரின் ஆக்கமும் அழிவும் உன்னாலே பைரவர் பூஜிக்கும் பைரவியே வெற்றிலைத் தலைவி சுத்த தெளிவு நீ எல்லோரும் வணங்கும் தெய்வம் நீ பக்தருக்குத் தாய் நீ வாக்கின் சக்தியான வாமகேஸ்வர மூலாதார வாஸினி கற்பகமே மோக பந்த கோப மாயா அறியாமை நீக்குவாய் அதர்மத்தை நசித்தே நல்வழி நடத்துவாய் உடல் மனம் ஆன்மாவின் துன்பத்தை நீக்கும் இளமையானவளே முனிவர் துதிக்கும் மெல்லிடையாளே அறியாமை அகற்றுபவளே ஞான வடிவே தத்வமணி வாக்கியப் பொருளே நீ தரும் ஆனந்தம் ப்ரம்மானந்தத்தை விஞ்சிடுமே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் பரா எனும் சப்தரூபிணி ஞானம் தரும் சக்தியே இடைநிலை அவதார வடிவே வாக்கின் ரூபமே பக்தரின் மன நீரோடையின் அன்னமே காமேஸ்வரனின் ஜீவநாடியே ஸர்வலோக சாட்சியே மன்மதன் பூஜிக்கும் சிருங்கார ரசமே ஜயமே ஜலாந்த்தர பீடவாஸியே ஆக்ஞா சக்ரவாஸினி பிந்து மண்டல வாஸினி ப்ரார்தனையில் வசப்படும் ரஹஸ்ய யாகத்தில் மகிழ்பவளே ஸர்வ சாட்சியாய் விரைந்து அருள்பவளே ஸாட்சி இலாதவளே ஆறு அங்க தேவதைகள் குணங்கள் உடன் கொண்டவளே இணையற்ற கருணா ரூபிணியே பேரானந்த பெருவாழ்வு தருபவளே 16 நித்ய தேவதை வடிவே அழகிய கழுத்துடன் அர்த்தநாரீஸ்வரியாய் தரிசனமே ப்ரகாச ஒளியே சிவப்ரகாசம் உன்னிடமே அடியார் அறிபவளே அருளாட்சி புரியும் நித்ய ரூபமே வெள்ளை மனத்தாளே எங்கும் நிறைந்த ப்ரஹ்மாண்ட சொரூபமே அறிவே அறியாமையே காமேஸ்வரனின் அல்லிமலர் கண்ணை திறக்கும் நிலவே அறியாமை இருளகற்றும் சூர்ய கிரணமே சிவபக்தர் அடையும் திருப்பாதமே சதாசிவன் பூஜிக்கும் மங்களமே சிவப்ரியே சிவனன்றி ஏது உன் துணையே நல்லோரை நாடுபவளே சுயம்பிரகாசியே மனம் வாக்கிற் கெட்டாதவளே எல்லையற்றவளே ஞான வடிவே உள்ளுணர்வே காலமே சூரிய ஒளியே யாரும் அறியாதவளே காயத்ரி ரூபமே சந்த்யாகாலமே உயிர்கள் தொழுபவளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் மேலான தத்துவமே பரமார்த்த ரூபமே சுகனப் ப்ரம்மமே அன்புத் தாயே சிறந்தவளே பஞ்ச கோச வாஸியே பிரம்மானந்தமே ஆனந்த களிப்பாடும் செந்நிறக் கண்ணழகி கஸ்தூரி பாதிரி திகழும் கன்னமே சந்தனம் சாற்றிய அங்கமே ஷண்பக மலர் உனக்கு விருப்பமே பராக்ரமசாலியே எழில் உன் தேகமே ஸ்ரீ சக்ர வாஸமே குலத்தின் ஈஸ்வரியே மூலாதார வாஸினியே கெளலமார்கம் உனைத் தொழுமே
5.
கணபதி கந்தன் தாயே
மகிழ்ச்சி மலரும் புஷ்ப வடிவே அமைதியே ஒளியே நந்தினியே விக்ன நாசினியே தேஜஸ்வினி முக்கண்ணி அழகியே அக்ஷர மாலை அணிபவளே அன்னமும் ஆராதிக்கும் அன்னையே மலைவாஸினி வசீகர முகமே மென்மையே அழகு உன் புருவமே மங்கள ரூபமே தேவர் தலைவி காலகண்டன் துணைவி ஸ்ருஷ்டி நாயகி சூட்சுமரூபிணி நித்ய தேவதையே வாமதேவன் இடப் பாகம் அமர்ந்தவளே குமரியே சித்தர்களின் தாயே தலைவியே வித்யா ரூபிணியே கமலா விசுத்தி சக்ரவாஸினி கருஞ்சிவப்பு நிறத்தவளே முக்கண்ணியே கபாலம் கட்வாங்கம் ஏந்தியவளே ஏகமுகத்தவளே பாயஸப் ப்ரியே தோல் திசுக்களில் உறைபவளே அறியாதவர்க்கு பயம் தருபவளே அம்ருதா சக்தி சூழ்பவளே விசுத்தி சக்ரத்தில் டாகினீஸ்வரி உன் நாமமே அனாஹத சக்ரவாஸினி கரும் பச்சை உன் வர்ணமே இரு முகம் கோரைப் பற்களும் உடையவளே ஜபமாலை தரித்து உதிரத்தில் உறைபவளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் காளராத்ரி சக்தி சூழ்பவளே நெய்யன்ன ப்ரியே ஞானிகளுக்கு வரமளிப்பவளே ராகினீ நாமம் உடையவளே மணிப்பூர சக்ரம் வஸிப்பவளே மூன்று முகத்தவளே சக்தி தண்டம் அபயமுத்திரா தரித்தவளே டாமாரி யோகினிகள் சூழ்பவளே செந்நிறத்தவளே சதைத் திசுக்களில் உறைபவளே சக்கரை பொங்கல் ப்ரித்தீயே பக்தருக்கு நலம் தருபவளே வகினீ எனும் அன்னையே சுவாதிஷ்டான நாயகியே நான்கு முகத்தவளே பொன் நிறத்தவளே சூலம் பாசம் கபாலம் ஏந்தியவளே அழகின் கர்வமோ எனும் தோற்றத்தவளே கொழுப்புத் தாதுக்களில் இருப்பவளே தேனை விரும்புவளே பத்ரகாளி மகாமாயா சூழ்பவளே தயிரன்னப்ரியே காகினி ரூபதேவியே மூலாதாரம் உறையும் ஐந்து முகம் கொண்ட என்புக்குரியவளே அங்குசம் தாமரை புத்தகம் ஞான முத்திரை ஏந்தியவளே வரதா யோகினிகள் சூழ்பவளே வெண் பொங்கலை விரும்பும் ஸாகினீ நாமம் கொண்டவளே ஆக்ஞாசக்ர வாஸினியே வெண் நிறத்தவளே ஆறுமுகம் கொண்டவளே ஹம்ஸவதி சக்தியுடன் புத்தியில் உறைபவளே ஹாகினி ரூபிணி மஞ்சள் பொங்கலில் ப்ரிதி அடைபவளே ஆயிரம் இதழ் தாமரை வாஸம் சித்ர வர்ணங்கள் அழகு சேர்க்கும் ஸர்வ ஆயுதங்களும் கரம் ஏந்தும் சுக்கில தாது தேவதையே ஸர்வமும் உன் முகமே யாகினியே ஸ்வாஹா ஸ்வதா வடிவே புத்தியே அவித்தையே வேதமாதா வேதவிதியே எல்லா அன்னத்திலும் ப்ரியமுள்ள உயர்ந்தவளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் புண்ணியப் புகழே புண்ணியப் பலனே உன் தோத்திரம் புண்ணியமே இந்த்ராணியின் தெய்வமே அலையெனச்சுருளும் உன் கேசமே பிறவிப் பிணி தீர்ப்பவளே விமரிசன வித்தை வடிவே ஆகாயம் படைத்தவளே ஸர்வ ரோக நிவாரணி மரண பயம் தவிர்ப்பவளே முதற்பொருளே அறிவு மனதிற்கேட்டாதவளே கலிதோஷ ஹாரிணியே காத்யாயணி காலனின் முடிவே விஷ்ணுவும் ஆராதிப்பவளே தாம்பூலம் மணக்கும் செவ்வாயும் மாதுளம்பூ மேனியும் மான் விழியும் மோகம் தருமே தேவதைகளின் தலைவியே சூரிய வடிவே சுகம் அளிப்பாய் நிறைந்தவளே பக்தரின் செல்வமே ஆள்பவளே தலைவியே நல்லவர்க்கு எளியவளே மகா ப்ரளய சாட்சியே பராசக்தி நிஷ்டையின் முடிவே முதல் அறிவே திராட்சா ரசத்தால் குளிர்பவளே அகங்கார ரூபிணியே அட்சரங்களின் ஒலி வடிவே கைலாஸ வாஸினி மெல்லிய தோள்கள் தாமரைக் கொடியே வழிபடத் தகுந்தவளே கருணை வடிவே பேரரசியே ஆத்ம வித்யா சொரூபிணி நவதுர்கா மந்த்ர ஸ்ரீவித்யா வடிவே மன்மதன் துதிக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மும்மூன்றரின் மந்த்ர வடிவே அருட்பார்வை கோடிலக்ஷ்மி கடாட்சம் ப்ரம்மேந்திர மஹாபிந்து வாஸம் பூரண சந்த்ர முகம் நெற்றி புவனேஸ்வரி பீஜம் உன் ஒலி வானவில்லாகும் இதயத்தில் சூர்ய ப்ரகாசம் மூலாதார முக்கோண தீபம் தட்ச புத்திரி பரமசிவ நாயகி அசுரர்குல நாஸினி தட்சயாகத்தின் முடிவு நீ உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம்
6.
சலிக்கும் கண்களும் புன்சிரிப்போடு
முகமும் கொண்ட குணவதியே குரு ரூபிணி காமதேனுவே குமரனின் அன்னையே தேவராணி நியாயத்தின் சாஸ்திரமே இதயத் தாமரை இருப்பிடமே பதினைந்து திதி மண்டலங்கள் உனை வணங்குமே அண்டமெல்லாம் உன் சேயே கலைவடிவே கலைத் தலைவியே காவ்ய வர்ணனையில் மகிழ்பவளே அலைமகளும் கலைமகளும் அனுதினம் வீசுவார் சாமரமே ஆதிசக்தியே ஆதாரசக்தியே அளவிலாதவளே ஆத்மாவாக இருப்பவளே பிறந்தவளே தூயவளே அழகு உன் உருவமே க்லீங்கார பீஜமே ரீங்கார வடிவமே இரகசியமாவளே முக்தி தருபவளே முப்புரத்தில் உறைபவளே மும்மூர்த்தி வடிவே தேவர் தலைவியே மூன்று அட்சர வடிவே நறுமணத்தவளே நெற்றியில் துலங்கும் சிந்தூரமே உமா பர்வத ராஜகுமாரி வெண்மை நிறத்தவளே கந்தர்வர் துதிப்பவளே உலகத்தை உடையவளே வருண பீஜ அக்ஷர வேதத் தாயே அசுரர் முடிவே வாக்கின் தலைவியே தியானப் பொருளே ஞானம் தரும் ஞான உருவே அறிய முடியாதவளே வேத முடிவால் அறியப்படுபவளே சத்ய ஞான வடிவே லோபா முத்ரையால் பூஜிக்கப்பட்டவளே உலகைப் படைத்தல் உனக்கு விளையாட்டே உன்னையன்றி வேறொன்றில்லை ஊனக் கண் உன்னை அறிவதில்லை எல்லாம் அறிந்தவளே யோகரூபிணி யோகா முடிவே யோகமும் யோக நித்திரையும் ஆனந்தமே உலகின் அச்சாணியே இச்சா ஞான க்ரியா சக்தி வடிவே ஆதாரமானவளே உயர்ந்தது உன் இருப்பிடமே இருப்பதும் இல்லாததும் உன் பொறுப்பே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் எட்டு வடிவே அறியாமை அகற்றுபவளே வாழ்க்கை உன் திருவுளமே தனித்தவளே ஆதார வடிவே இரண்டாக அதற்கும் மேலாக இருப்பவளே அன்னமும் ஐஸ்வர்யமும் தருபவளே முதிர்ந்தவளே பரமாத்ம ரூபிணி பெரிய நாயகி சிவபத்னி சரஸ்வதி ப்ரஸ்மானந்தினி வீரம் உனக்கு விருப்பமே மொழி வடிவே சேனைத் தலைவி ஆக்கம் அழிவற்றவளே எளிமையானவளே மங்களமே நித்யானந்தம் தருவாய் ராஜராஜேஸ்வரி ராஜ்ஜியம் தருபவளே கருணை உள்ளவளே ஆள்பவரை அன்பால் ஆள்பவளே ராஜ போகம் தருபவளே செல்வமே கோஷங்களின் தலைவி படைகளின் அரசி பக்தருக்கு பேரரசு தரும் சத்தயவதி ஏழு கடலும் உன் இடையில் ஒட்டியாணமே தீட்சையின் வடிவே அசுரரை அழிக்கும் புவனேஸ்வரி தர்மார்த்த காம மோக்ஷம் அழிக்கும் சிவசக்தி பேரானந்த அறிவு நீ காலம் இடம் உனை அணுகாது நிறைந்தவளே மயக்கம் தருபவளே ஞானசக்தி சாஸ்த்ர வடிவே குகனின் தாயே ரஹஸ்ய வடிவே எல்லையற்றவளே சதாசிவ பத்னி தூய்மையின் வடிவே தர்ம ரூபிணி குரு மண்டல வடிவே மாயாஸ்வரூபிணி சூர்ய மண்டல பூஜை ஏற்பவளே ஏழாவது யோகவடிவே பூமியே கணபதி தாயே இதயக் கமல பூஜா நாயகி சிவபத்னியே சுதந்திரமான தந்த்ரங்களின் அரசி தட்சிணாமூர்த்தி வரவே சனகாதி முனிவர் ஆராதிப்பவளே சிவதத்வம் சொல்பவளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் அறிவே பேரானந்த சக்தியே அன்பின் வடிவே வேண்டுவதை தருபவளே நாம பாராயணத்தில் மகிழ்பவளே நந்தி துதிக்கும் வித்யா ரூபிணி நடராஜ நாயகி மாயத்தின் மூலமே முக்தி வடிவே முக்தி தருபவளே நடன பிரியே லயிக்கச் செய்பவளே கண்ணிய வடிவே ரம்பையும் வணங்கும் அம்பிகையே பிரவித் தீயைத் தணிக்கும் அம்ருதமே பாவத்தின் அந்தமான அனலே துன்பம் துயரத்தை விரட்டும் சுழற்காற்றே மூப்பின் வடிவான சூர்ய ஒளியே கடலின் பேறான நிலவே மனமெனும் மயிலின் மேகமே நோய்களைத் தீர்க்கும் வஜ்ராயுதமே காலனைக் கடியும் கோடாலியே அரசியே காளியே பிரளயத்தில் உலகு உனக்கொரு கவளமே மலையென உண்பவளே தீயவர்க்கு தீயே சண்டமுண்ட நாஸினி துர்கையே அழிவு நீ நிலையானது நீ ஈரேழு உலகத் தலைவி உலகைக் காப்பவளே அறம் பொருள் இன்பம் தரும் செளபாக்யமே முக்கண்ணியே முக்குணமே சொர்க்கம் மோட்சம் தருபவளே தூயவளே செம்பருத்தி நிறைந்தவளே கூர்மையும் வன்மையுமான இந்த்ரியமே தேஜஸ்வீ வேள்வி வரவே விரத்ப்ரியே
7.
புலனடக்கமின்றி உன் அருள்
வருமோ பாதிரிப் பூவில் ப்ரியமுள்ளவளே பெரியவளே மேருமலை வாஸினி மந்ததாரப் பூவில் மனம் மயங்குபவளே வீரர் வணங்கிடுவார் உன்னை ப்ரபஞ்ச வடிவே குற்றமற்றவளே எங்கும் உன் முகமே ஆன்ம வடிவே ஆகாய ரூபிணி உயிரைத் தரும் உயிரே மார்த்தாண்ட பைரவர் பூஜித்தவளே ராஜேஸ்யாமளா செய்வாள் உன் ராஜ பரிபாலனமே திரிபுரத்தின் அரசி பகையை வெல்லும் உன் படையே பரமே அபரமே சத்வகுணமே சத்ய ஞான பேரானந்தமே சிவனின் பாதியே அறுபத்து நான்கு கலைகள் கழுத்தில் மாலையே வேண்டியதைத் தரும் காமதேனுவே விரும்பிய வடிவெடுப்பது உன் ஆற்றலே கலையின் காரணமே காவ்ய கலையே காவ்யரஸம் அறிந்தவளே பேரானந்தப் பெட்டகமே செழுமையே அனாதியே துதிக்கத் தகுந்தவளே தாமரைக் கண்ணியே பரஞ்சோதி சிறந்தவளே அணுவிற்கு அணுவே மும்மூர்த்திகள் உனக்கிலை ஈடே பாசம் ஏந்தியவளே பாசம் நீக்குபவளே பகைவரின் அஸ்த்ர மந்திரத்தை பிளப்பவளே உருவமே அருவமே நிறைவு உள்ளவளே முனிவர் மனத்தின் அன்னமே சத்ய வடிவே சத்ய வாக்கிற்கு எளியவளே செயல் வடிவே தாட்சாயணீ பிரம்மாணி வேதமாதா படைப்பவளே அநேக வடிவே ஞானிகள் தியானமே தோற்றுவிப்பவளே ஆதாரமே கோபாக்னியே அனைவரும் அறியும் உருவே ஆத்மாவின் புலன்களின் தலைவி கர்ம பலனைத் தரும் தேவி சக்திபீடம் நீ தடை இலாதவளே விவேவிகள் ஸ்ருதய வாஸியே நல்லவர் தாயே ஆகாயம் ஆக்கியவளே முக்தி தருபவளே முக்தி இருப்பிடமே ராஜ ராஜேஸ்வரியே எண்ணும் எண்ணங்களை அறிபவளே பிறவிப்பிணி நீக்கி பிறவிச் சக்கரம் சுழற்றுபவளே வேத சாஸ்த்ர மந்த்ர சாரமே சிறந்த உன் வயறு சிறியதே பரந்தது உன் பெருமையே எழுத்து வடிவே தேவி பிறவித் துயரகற்றி வீடு பேறு தருபவளே உபநிடம் போற்றும் உயர்ந்தவளே உன் கலை வடிவு அமைதியை மிஞ்சுமே ஆழமானவளே ஆகாசத்தில் இருப்பவளே பெருமிதமானவளே சங்கீத ரஸிகையே கற்பனை அற்றவளே முடிவே பாப நாஸினி பரமன் இடப்பாகம் இருப்பவளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் காரண கார்யம் உனக்கிலையே காமேஸ்வரன் கலைகள் உன் அருட் கடலிலே மின்னும் தடாகம் காதிலே உருவங்கள் எல்லாம் உன் விளையாட்டே பிறப்பற்றவளே செளந்தர்யமே பக்தரைக் கடுகிக் காப்பவளே உன் மனதின் தேடலே அறிவால் அறியவொணா ஆற்றலே மூன்று வேத வடிவே முப்பாலுக்கப்பால் நின்றவளே திரிபுரத்தில் இருப்பவளே ஆறாம் ஆவரணமே பிணியற்றவளே பிடிப்பொழித்தவளே தானே ரஸிக்கும் ஸஹஸ்ரார அம்ருதமே சம்ஸார சகதியில் கைகொடுப்பவளே தவம் யாகம் விரும்புவளே வேய்வியைச் செய்பவளே தலைவியே தர்மத்தின் ஆதாரமே மஹாலக்ஷ்மியே தனம் தான்யம் தருபவளே வேத ஒலியில் மகிழ்பவளே உலகம் சுழல்வது உன்னாலே உலகைக் கவளமாய் உண்பவளே பவளமே விஷ்ணுமாயே பிறப்பின் காரணமே உலகப் படைப்பின் உற்பத்தி மூலமே அசையாதவளே தர்மத் தலைவியே சக்தி உபாஸனையில் இஷ்டமுள்ளவளே வீரமாதா செயலற்றவளே நாத வடிவே ஆத்மாவை அறிந்தவளே கலா அரசி தந்திரசாலி பிந்து ஆஸன வாஸினி முப்பத்தியாறு தத்துவம் கடந்தவளே ஆத்ம வித்யா சிவதத்வ ஸ்வரூபிணி பரமும் ஜீவனுமானவளே ஸாமகானப்யே சந்த்ரிகையே சிவா பத்னியே ஸ்ருஷ்டி லயம் உன்னிடத்திலே ஆபத்ஸஹாயினி தானே தானாய் ஆனவளே ஆனந்தத்தின் உறைவிடமே அறிவில் சிறந்தவளே புத்தி தருபவளே விஸேஷ அர்க்யம் உன் ஆராதனை சைதன்ய மலரை விரும்புபவளே உதயமே சந்தோஷியே உதிக்கின்ற சூரிய நிறத்தவளே உமையே லலிதாம்பிகையே அன்னையே சரணம் படித்தோரும் பாமரரும் துதிக்கும் தேவி உன் சிரிப்பு பூத்த தாமரையே காலத்தின் சூத்ரதாரியே வீடு பேறு தருபவளே ஸஹஸ்ர நாமப்ரியே கல்வி செல்வம் தருபவளே வேதம் போற்றும் பெருமையே மனதின் கடிவாளமே பெருந்தன்மையளே மஹேஸ்வரி மங்களமே உலகின் அன்னையே உலகின் தூணே அகன்ற கண்ணழகியே மனோபலம் உள்ளவளே வீரச்செல்வி தர்மசாலினி ஆனந்தி அன்பான நல்லறிவே சிவனின் துணைவி தேவர் விமானவாஸினி இந்த்ராணி தேவர் தலைவி பஞ்ச யாகங்களில் மகிழ்பவளே பஞ்ச பிரேதங்களும் உன் மஞ்சமே
8.
சதாசிவ பத்னி பஞ்சபூதத்
தலைவி கந்த மலர் தூப தீப நிவதேனங்கள் உபசாரமே அழியாதவளே செல்வம் கொண்டவளே இன்பத்தின் உறைவிடமே சிவனை மயக்குபவளே பூதேவியே பர்வத ராஜகுமாரி செல்வியே அறம் வளர்த்த நாயகி ஞாலம் குணம் கடந்தவளே சாந்த ஸ்வரூபிணியே பந்தூக மலர் ஒளியே பாலாம்பிகையே ப்ரபஞ்சம் உன் விலையே சுமங்கலியே பேரானந்தப் படகு அழியாததே அலங்கார ரூபிணியே சுமங்கலி பூஜையில் மனம் நிறைபவளே இளமை அழகு உள்ளவளே தூய மனத்தவளே பிந்து தர்ப்பணம் ஏற்பவளே முதலே த்ரிபுராம்பிகையே தச முத்திரைகள் ஆராதனையே த்ரிபுராஸ்ரீ உன் வசமே ஞானமே ஞானத்தால் உனை அடையலாமே அறிவும் அது போன்றதும் நீயே யோனி முத்திரை வடிவே ஸோம சூர்ய அக்னி முத்திரைத் தலைவியே முக்குணமே அதன் தாயே ஸ்ரீ சக்ர வாஸினி புண்ய ரூபிணி அற்புத சரித்ரமே வேண்டுவது தருபவளே ஆழ்நிலைத் தியானம் உன்னைக் காட்டுமே ஆறு உபாஸனைகளைக் கடந்தவளே தாயினும் சாலப் பரிந்து வருபவளே ஞான ஒளியேற்றும் தீபமே சிறியோரும் பெரியோரும் உனை அறிவாரே உன் கட்டளை மீறுவார் யாரே ஸ்ரீ சக்ரம் உன் இருப்பிடமே ஸ்ரீமதி த்ரிபுரஸுந்தரி பரம மங்கள ரூபிணி சிவசக்தி ரூபிணி ஸ்ரீ லலிதாம்பிகா உலகைக் கடந்தவளே உன்னதமானவளே ஸ்ரீ லலிதா தேவி உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
Download