Writing short stories for Tamil magazines

Loading...

Flash Player 9 (or above) is needed to view presentations.
We have detected that you do not have it on your computer. To install it, go here.

0 comments

Post a comment

    Post a comment
    Embed Video
    Edit your comment Cancel

    Favorites, Groups & Events

    Writing short stories for Tamil magazines - Presentation Transcript

    1. உரையாடல் பத்திரிகைகளுக்குச் சிறுகதை எழுதுதல் தொடக்கநிலை எழுத்தாளர்களுக்குச் சில குறிப்புகள்
    2. எச்சரிக்கை சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயம் உள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவம் உள்ள நண்பர்களுக்கு இது உதவாது. வார இதழ்களில் எழுத விரும்புவோருக்கு மட்டுமே இது.
    3. நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது . * உண்மையை எழுதுங்கள் * பாசாங்கின்றி எழுதுங்கள் * எளிமையாக எழுதுங்கள் * உங்களுக்கென்று ஒரு மொழி முக்கியம் .
    4. என்ன வேண்டும் ? ஏன் பத்திரிகை ?
      • பெயர் அச்சில் வரவேண்டும்
      • புகழ் வேண்டும் . பிரபலமாக வேண்டும்
      • எழுதி சம்பாதிக்க வேண்டும்
      • ஆத்ம திருப்தி
      • பகிர்ந்துகொள்ளும் சந்தோஷம்
    5. பத்திரிகைகளைப் புரிந்துகொள்ளுங்கள்
      • நம்மைவிட வயது அதிகம் , அனுபவம் அதிகம்
      • லட்சக்கணக்கான மக்களிடம் நேரடியாகச் செல்கிறார்கள்
      • விமரிசனம் இன்றி அணுகுங்கள்
      • நாம் முன்னுக்கு வர பத்திரிகை ஒரு படிக்கட்டு
    6. யார் வாசகர்கள்?
      • பெண்கள் அதிகம்
      • வயதானவர்கள் அதிகம்
      • சராசரிகள் அதிகம்
      • பொழுதுபோக்குக்காகவே படிக்கிறார்கள்
      • தேர்ந்தெடுக்கும்போது ஆசிரியர்களுக்கு இது மனத்தில் மேலோங்கி நிற்கும்
    7. உதவி ஆசிரியர் எப்படிப்பட்டவர் ?
      • பெரும்பாலும் அடிபட்டவர்கள் , கஷ்டஜீவிகள்
      • பெரும்பாலும் இரக்க சுபாவம் கொண்டவர்கள்
      • பெரும்பாலும் நல்லவர்கள்
      • பெரும்பாலும் விரக்தி கொண்டவர்கள்
      • பெரும்பாலும் குடும்பக் கதைகளை விரும்புகிறவர்கள்
      • பெரும்பாலும் நல்ல முடிவுகளை விரும்புகிறவர்கள்
      • பெரும்பாலும் ஒரு நல்ல எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிடமாட்டோமா என்று ஏங்குபவர்கள் .
    8. எப்படிப்பட்ட கதைகள் வரும்?
      • வடிவமற்ற கதைகள்
      • காலப்பிரக்ஞையற்ற கதைகள்
      • பேரா பிரிக்கத் தெரியாதவர்களின் கதைகள்
      • நாவல்களின் சுருக்கங்கள்
      • நீதி சொல்லும் கதைகள்
      • அர்த்தமற்ற திடீர்த் திருப்பக் கதைகள்
    9. அனைத்தையும் படிப்பார்களா?
      • அநேகமாக தினம் 100 கதைகள் வரும்
      • அனைத்தையும் பார்ப்பார்கள்
      • அனைத்திலும் முதல் பேரா படிப்பார்கள்
      • ஆர்வம் தூண்டினால் மட்டுமே மேலே படிப்பார்கள்
    10. எனவே முதல் வரி முக்கியம்!
      • பளிச்சென்று இருக்கவேண்டும்
      • புதிதாக இருக்கவேண்டும்
      • ஆர்வம் தூண்டுவதாக இருக்கவேண்டும்
      • கட்டிப்போட வேண்டும்
      • எளிமையாக , கூர்மையாக , அர்த்தம் பொதிந்திருக்க வேண்டும்
      • கதையின் மையக்கருவுக்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும்
    11. பளிச்சென்று இருக்கவேண்டும்
      • தீக்குழி இறங்குவது , அலகு குத்தி ஆடுவது , கத்தி போடுவது இவற்றுக்குச் சமானமான ஒரு புனிதப் பணிதான் தினசரி செய்தித்தாள் படிப்பதும் என்பது இஸ்மாயிலின் அபிப்பிராயம் . தன்னைத்தான் துன்புறுத்திக்கொண்டு இன்புறும் காரியம் .
      • [ தெரிந்தவர் , யுவன் சந்திரசேகர் ]
    12. புதிதாக இருக்கவேண்டும்!
      • கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும் . விஷயம் ஒன்றும் பிரமாதமானதில்லை . என் தம்பி ஒரு மலையாளத் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறான் . நான் தாய்லாந்தில் வறுத்த மீன் விற்று அனுப்புகிற பணத்தில் நடக்கிற காரியம் அது .
      • [ நாயர் கதை , இரா . முருகன் ]
    13. ஆர்வம் தூண்டு!
      • என் பிரிய சிநேகிதிக்கு , உன் பெயரை நான் அறியேன் . இருந்தாலும் இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதக் காரணம் - இப்போது வேண்டாம் . போகிற போக்கில் நீயே புரிந்துகொள்வாய் .
      • [ கண்ணிநுண் சிறுத்தாம்பு , சாரு நிவேதிதா ]
    14. கட்டிப்போடு!
      • திடீரெனப் புதுவிதமாய் எனக்குக் கண்கள் திறந்தாற்போலிருந்தது . விழிமேல் படர்ந்த மெல்லிய சதையைப் பிய்த்தெறிந்தாற்போல் . இமையோரங்கள் உட்புறம் அவ்வளவு வலித்தன . தலையை உதறிக்கொண்டேன் . விர்ரென மாலைக் காற்று விழியோரங்களின் உள் பாய்ந்து கண்கள் சில்லிட்டன .
      • [ காயத்ரி , லா . ச . ராமாம்ருதம் ]
    15. எளிமை, கூர்மை, அர்த்தம்!
      • கல்யாணம் எல்லாம் முடிஞ்சு சத்திரத்தைக் காலி பண்ணிண்டு அண்ணாவும் மன்னியும் ஒரு டாக்சியில் வந்து இறங்கினபோது அம்மா ஆரத்தி எடுத்தாள் . அப்பவே அண்ணாவின் முகத்தில் ஒரு அசட்டுத்தனம் கவ்விக்கொண்டதை என்னால் பார்க்க முடிஞ்சிது . வாழ்க்கையில் அத்தனையும் தோத்துட்டு , மன்னியை மட்டும் கை பிடிச்சு அழைச்சுண்டு வந்த மாதிரி தோன்றியது .
      • [ இன்றுபோய் , சுப்ரமணிய ராஜு ]
    16. மையக் கருவுடன் நெருக்கம்
      • சரி, இறந்துவிடலாம் என்று முடிவு செய்தவுடன் கணேசன் எதிர்ப்பட்ட மருந்துக்கடைக்குச் சென்று பத்து காம்போஸ் மாத்திரைகள் வாங்கிக்கொண்டான்.
      • [யுவர்ஸ் ஒபீடியண்ட்லி, பா.ராகவன்]
    17. கதை எழுதும் கலை
      • எழுதுமுன் சொல்லிப்பாருங்கள் . சொல்லும் முறையிலேயே எழுதுங்கள்
      • ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று பாத்திரங்களுக்குமேல் வேண்டாம்
      • பிரச்னை என்ன என்பதை முதலில் சொல்லுங்கள் . யாருக்கு என்பது அடுத்தது . தீர்வை நோக்கிச் செல்லுங்கள் . அநாவசியங்கள் வேண்டாம் .
    18. கதை எழுதும் கலை
      • பாத்திரங்கள் மனத்தில் நிற்க வர்ணனை முக்கியம் . கதைக்களம் புரிய விவரணை அவசியம் . ஆனால் அதிகம் வருணிக்காதீர்கள் . குறைந்த சொற்கள் . தெளிவான படம் .
      • நுணுக்கமான விவரங்கள் மணம் சேர்க்கும் . ஆனால் விவரங்களோடு நின்றுவிடக்கூடாது
    19. கதை எழுதும் கலை
      • கருத்தைத் திணிக்காதீர்கள் . காட்சியாக்கிப் புரியவையுங்கள் [ அவர் ரொம்ப நல்லவர் ]
      • சிறுகதை என்பது வசனங்கள் அல்ல . குறைவாகப் பேசவிடுங்கள் . கூர்மை முக்கியம் .
      • நீதி சொல்லாதீர் . நீதிக்கதைகள் எழுதாதீர் .
      • அன்றாடப் பிரச்னைகளில் இருந்து கதைகளை எடுக்கவும் . சமூகப்பிரச்னையாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை .
    20. கதை எழுதும் கலை
      • தீர்வு சொல்வது சிறுகதையின் வேலையில்லை . பிரச்னையை , சூழலை சரியாக விவரிப்பதுதான் இருக்கும் சவால் .
      • பத்திரிகைகளில் பிரசுரமாக இதெல்லாம் அவசியம் . இந்த அம்சங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல கதையில் இருக்கும் .
    21. கதை எழுதும் கலை
        ஆனால் நல்ல கதை என்பது இவற்றைக் கடந்தது .
    22. ஆளுக்கொரு விதம்?
      • ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு
      • திருப்பம் இருந்தால் குமுதம் விரும்பும்
      • புரட்சி இருந்தால் விகடன் ரசிக்கும்
      • போதனை இருந்தால் கல்கிக்குப் பிடிக்கும்
    23. ஆளுக்கொரு விதம்?
      • பத்து வரிக்குள் முடிந்தால் குங்குமம் பிரசுரிக்கும்
      • பெண் கண்ணீர் விட்டால் மங்கையர் மலர் ரசிக்கும்
      • அவளே பொங்கி எழுந்தால் ராணி கொண்டாடும்
    24. ஆளுக்கொரு விதம்?
      • எல்லாம் வெறும் பிரமை
      • எந்தப் பத்திரிகையும் இப்படியான வரையறைகள் வைத்துக்கொள்வதில்லை
      • படித்தால் கவரவேண்டும். முடித்ததும் ‘அட’ என்று சொல்லவைக்க வேண்டும். அவ்வளவுதான்.
    25. சில அடிப்படை ஒழுக்கங்கள்
      • கையில் கிடைக்கும் அனைத்தையும் படியுங்கள் . நல்ல கதைகளைத் தேடிப்படியுங்கள்
      • உங்களை மிகவும் பாதித்த கதைகளை எடுத்து வைத்துக்கொண்டு எந்த அம்சம் பாதித்தது , ஏன் பாதித்தது என்று கட்டுடைத்துப் பாருங்கள் .
    26. சில அடிப்படை ஒழுக்கங்கள்
      • வாழ்வைக் கூர்ந்து கவனியுங்கள் . வாசித்ததோடு ஒப்பிட்டுப் பாருங்கள்
      • ஒருமுறை எழுதியது நன்றாகவே இருந்தாலும் இன்னொரு முறை வேறு வடிவத்தில் எழுதிப்பாருங்கள் . மூன்று முறையாவது முழுதும் மாற்றி எழுதிப்பாராமல் நல்ல கதை உருவாகாது .
    27. சில அடிப்படை ஒழுக்கங்கள்
      • மூன்றிலொரு பங்கு போதும்
      • கவரிங் லெட்டரில் காவியம்
      • தெளிவாக , போதிய இடைவெளிவிட்டு எழுதுங்கள்
      • இருபுறம் எழுதப்பட்ட தாள்களை யாரும் வாசிப்பதில்லை
    28. சில அடிப்படை ஒழுக்கங்கள்
      • நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குமேல் போகக்கூடாது .
      • தோராயமாக 900 சொற்கள்
      • கதைகள் சுண்டல் அல்ல . எல்லா பத்திரிகைகளுக்கும் ஒரே கதையை அனுப்பாதீர் . திரும்பி வந்தாலொழிய இன்னொன்றுக்கு அனுப்பாதீர் .
    29. நமக்கே தெரிவது எப்போது?
      • அனுப்புவதற்கோ , பிரசுரமாவதற்கோ அவசரப்பட மாட்டோம் . திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து இழைத்துக்கொண்டே இருக்கத் தோன்றும்
      • அனுப்பி , திரும்பி வந்தால் எளிய புன்னகை நம்மையறியாமல் வரும்
      • விசேஷ மலர்கள் , பண்டிகை மலர்களுக்குக் கதை கேட்டுக் கடிதம் வரும்
      • தொடர்கதைக்கு சினாப்சிஸ் கேட்பார்கள்
    30. இறுதியாக...
      • நிபந்தனைகளுக்கு உட்பட்ட சிறுகதைகள் எழுதுவது ஒரு நல்ல பயிற்சி
      • 50 படித்து ஒன்று எழுதுவது பலன் தரும்
      • தினசரி எழுதுவது நல்லது. நாலு பக்கமாவது
      • பத்திரிகை இறுதி இலக்கல்ல. ஒரு நல்ல தொடக்கம்.
    31. இறுதியாக...
      • அனுபவமே இலக்கியமாகிறது
      • எனவே அடிபடுவது பற்றிக் கவலை வேண்டாம்
      • வாழ்க்கை ஒரு சிறந்த பயிற்சி முகாம். அதை கவனிக்கவும். அதை மட்டும் கவனித்தாலே போதும்.
    32. உரையாடல் அமைப்புக்காக
      • பா. ராகவன்
      • ஆசிரியர் - கிழக்கு பதிப்பகம்
      • New Horizon Media Private Limited # 33/15 Eldams Road, Alwarpet, Chennai 600 018
      • Phone : 044 - 42009601 / 02 / 03
    SlideShare Zeitgeist 2009

    + Badri SeshadriBadri Seshadri Nominate

    custom

    681 views, 0 favs, 5 embeds more stats

    A primer on how to have your short stories publishe more

    More info about this document

    © All Rights Reserved

    Go to text version

    • Total Views 681
      • 425 on SlideShare
      • 256 from embeds
    • Comments 0
    • Favorites 0
    • Downloads 5
    Most viewed embeds
    • 125 views on http://thoughtsintamil.blogspot.com
    • 123 views on http://www.writerpara.com
    • 5 views on http://www.thoughtsintamil.blogspot.com
    • 2 views on http://kasethankadavulada.blogspot.com
    • 1 views on http://thurkai.blogspot.com

    more

    All embeds
    • 125 views on http://thoughtsintamil.blogspot.com
    • 123 views on http://www.writerpara.com
    • 5 views on http://www.thoughtsintamil.blogspot.com
    • 2 views on http://kasethankadavulada.blogspot.com
    • 1 views on http://thurkai.blogspot.com

    less

    Flagged as inappropriate Flag as inappropriate
    Flag as inappropriate

    Select your reason for flagging this presentation as inappropriate. If needed, use the feedback form to let us know more details.

    Cancel
    File a copyright complaint
    Having problems? Go to our helpdesk?

    Categories